துணை வேந்தர் முடிவால் கொதித்தெழுந்த பேராசிரியர்கள்

x

முன்னாள் பதிவாளர் தங்கவேலு மீது 8 குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருந்த தங்கவேலுவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கு 2 முறை கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் தங்கவேலு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவருக்கு ஓய்வு வழங்கியது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது... தங்கவேலுக்கு தற்காலிகமாக மாதம் 74 ஆயிரம் ரூபாய் ஒய்வூதியம் வழங்கிட துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பொறுப்பு பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி ஆகியோர் ஆணை பிறப்பித்துள்ள நிலையில் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கத்தினர் மற்றும் பேராசிரியர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.துணைவேந்தர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை செயலருக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும்,போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்