பேருந்து நிறுத்தத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
சேலத்தில் பேருந்து நிறுத்தம் அருகே பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவரது பூர்வீக நிலத்தை உறவினர்கள் விற்கவிடாமல் தடுப்பதாக கூறி, அவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்றார். அப்போது சுமதி திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால், அங்கிருந்தவர்கள் பதறியடித்து கொண்டு ஓடினர்.
Next Story