"குழந்தையை பார்க்க விடு..." செல்போன் டவர் மீது ஏறி போராடிய தந்தை.. சேலத்தில் பரபரப்பு | Salem

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, மனைவியை கண்டித்து செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட போதை ஆசாமியை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். காடையாம்பட்டி தாலுகா தளவாய்ப்பட்டியை சேர்ந்த சின்னண்ணனின் மனைவி அவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். தனது 2 வயது மகனை பார்க்க அவரது மனைவி அனுமதி மறுத்ததால், அருகிலிருந்த செயல்படாத 100 மீட்டர் உயரமுள்ள செல்போன் டவர் மீது ஏறி நின்று தனது மனைவியை கண்டித்தும், தனது மகனை பார்க்க அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் 2 மணி நேர போராட்டத்திற்கு அவரை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்