தடமின்றி அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்.. தினம் தினம் அச்சத்துடன் கடக்கும் மக்கள்

x

ஏற்காட்டில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புத்தூர் மலை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள தரை பாலம் ஃபெஞ்சல் புயலின் போது உடைந்து விட்டது. இதனால், புளியங்கடை, புத்தூர், மருதையங்காடு, சாலாபாரை,சேட்டுகாடு உள்ளிட்ட 8 கிராமங்களுக்கான சாலை துண்டிக்கப்பட்டது. ஒருமாதகலாம் ஆகியும் இந்த பாலம் சீரமைக்கப்படாததால், தற்காலிக மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தற்காலிக மரப்பாலத்தை கடக்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். விரைந்து செயல்பட்டு, தரைப்பாலத்தை சீரமைத்து தரவேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்