"எங்கள் சாமி எங்களுக்கு வேண்டும்..!"இருதரப்பினர் இடையே வாக்குவாதம்.. சேலத்தில் பரபரப்பு

x

ஓமலூர் அருகே அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒரே சமுதாயத்தில் இரு மொழி பேசுபவர்களும் அதனை வழிபாட்டு வந்தனர். இந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே கோவில் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடியதால், பிரச்சனை ஏற்பட்டு திருவிழா கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மோதல் ஏற்பட்டதால் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டு, 4 நாட்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமையன்று திறக்கப்பட்டது. அப்போது இரு தரப்பும் கோவிலுக்குள் புகுந்து ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து தாக்கி கொண்டனர்.

இதனிடயே ஒரு தரப்பினர் மற்றொரு கோவில் தரப்பில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். தலைமுறை தலைமுறையாக ஒன்றாக கொண்டாடி வந்த நிலையில், எங்களை கோவிலுக்குள் வர விடாமல் தடுத்து பெண்களை தாக்குகிறார்கள், எங்கள் சாமி எங்களுக்கு வேண்டும் என வலியுறுத்தினர். தலைமை செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவருக்கு ஆதரவாக அதிகாரிகள் செய்யப்பட்டு வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்