மனைவி மரணம்.. “ஐந்து பிள்ளைகளை வைத்து எப்படிச் சமாளிக்கப் போகிறேன்“- கண்ணீர் விட்டு கதறும் கணவன்
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த பனைமடல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். லாரி ஒட்டுநரான முருகனின் மனைவி செல்லத்திற்கு நான்கு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 14 ம் தேதி செல்லம் ஐந்தாவது பிரவசத்திற்காக செல்வம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சுகப்பிரசவத்தின் மூலம் செல்லத்திற்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது.இதனைத் தொடர்ந்து செல்லத்திற்கு மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து இருக்கின்றனர். இதனால் செல்லத்திற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது.இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காகச் செல்லத்தைச் சேலம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்து இருக்கின்றனர்.ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி செல்லம் உயிரிழந்தார்.
Next Story