சேலத்தில் ரோட்டில் வந்த இருவர் - பேய்க்கு பயந்து தங்க நகையை வாரி கொடுத்த இளைஞர்
சேலத்தில் சாம்பிராணி புகை போட்டு வீட்டில் பேய் இருப்பதாக கூறி, வாலிபரிடம் நகை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் தளவாய்பட்டியைச் சேர்ந்த விஜய் என்ற இளைஞர் வீட்டில் தனியாக இருந்த போது, மயிலிறகால் சாம்பிராணி போடும் இரண்டு பேர் வீட்டிற்கு வந்ததனர். அவர்கள் வீட்டில் பேய் இருப்பதாகவும், இதனால் அவரின் தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். தங்க நகைகளை வைத்து பூஜை செய்தால் உயிர் பிழைக்கலாம் என்று தெரிவித்தவுடன், பீரோவில் இருந்த மூன்றரை பவுன் நகையை விஜய் எடுத்து கொடுத்தார். அதனை வைத்து சாம்பிராணி புகைகளை எழுப்பிய அந்த நபர்கள், நகைகளை எடுத்து சென்று விட்டனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Next Story