நெருங்கும் பக்ரீத்.. களைகட்டிய ஆடுகள் விற்பனை - ஒரே நாளில் இவ்ளோ கோடியா..?
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் மிக பெரிய அளவில் ஆட்டு சந்தை நடைபெற்று வருகிறது. சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட சுமார் 30 ஆயிரம் ஆடுகளில், இன்று 22 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகியுள்ளன. சராசரியாக ஆடு ஒன்று 3 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று 9 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
Next Story