அரிதான இதயத் துடிப்பு நோய் - மரணப் படுக்கையில் இருந்த உயிர்களை எழுப்பிய மருத்துவர்கள் | Salem

x

சேலத்தைச் சேர்ந்த சோபனேஸ்வரி, ராதிகா ஆகிய இருவரும் சீரற்ற இதயத் துடிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தனர்... சராசரியாக நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை துடிக்க வேண்டிய இதயம் 150 முதல் 300 முறை துடிப்பது தான் சீரற்ற இதயத் துடிப்பு நோய்...

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிற்காலத்தில் இருதய செயலிழப்பு ஏற்படலாம் என்பதால் இதைத் தடுக்க சோபனேஸ்வரி, ராதிகா இருவருக்கும்

சேலம் அரசு மருத்துவமனையில் எலக்ட்ரோ பிஸியாலஜி மூலம் நோயின் தன்மை கண்டறியப்பட்டு, கதிரியக்க சிறப்பு சிகிச்சை மூலம் முழுவதுமாக குணமடைய செய்துள்ளனர் மருத்துவர்கள். இந்த சாதனையைப் படைத்த இருதயத்துறை மருத்துவக் குழுவிற்கு சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் பாராட்டுகளை தெரிவித்தார். இந்த நோய்க்கான சிகிச்சை முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்