குழந்தை இல்லாமல் வாடும் அக்காவை பார்க்க வந்த தங்கையிடம் எல்லை மீறிய மாமா..
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே, அக்காவை சந்திக்க வந்த இளம் பெண்ணை, அவரது அக்காவின் கணவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இளைஞர் வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அக்கா, தங்கை இருவரும் கூட்டாக போலீசில் புகாரளித்துள்ளனர். மேலும், குற்றஞ்சாட்டப்படும் இளைஞர் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்து வந்ததாகவும், குழந்தையின்மையை காரணம் காட்டி தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படும் நிலையில், அவரை போலீசார் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story