கிளி வளர்த்த கூண்டுக்கிளி.. மத்திய சிறையை அதிரவிட்ட ஆயுள் கைதி `சீவலப்பேரியான்'

x

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நெல்லை சுத்தமல்லியை சேர்ந்த சீவலப்பேரியான் என்பவர் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையின் தனியறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் பச்சைக்கிளி வளர்த்து வருவதாக சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சிறை போலீசார் கைதி அறைக்கு சென்று கிளியை மீட்டனர். அப்போது சீவலப்பேரியான் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கைதி கிளி வளர்த்ததை கண்டுகொள்ளாமல் இருந்த ஜெயிலர், சிறை அலுவலர், வார்டன்களுக்கு, சிறை கண்காணிப்பாளர் வினோத் விளக்கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்பியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்