டாடா ஏஸ் வாகனத்தை லாவகமாக திருடிய சிறுவன் - மிரளவிடும் சிசிடிவி காட்சிகள்

x

டாடா ஏஸ் வாகனத்தை லாவகமாக திருடிய சிறுவன் - மிரளவிடும் சிசிடிவி காட்சிகள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் மாரிமுத்து ரோடு பகுதியில் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா ஏஸ் சரக்கு வாகனத்தை சிறுவன் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதே பகுதியை சேர்ந்த பழம் வியாபாரியான கணேசன் தனது டாடா ஏஸ் வாகனத்தை தனது வீட்டின் அருகே உள்ள சாலையில் நிறுத்திவிட்டு சென்று, காலை வந்து பார்த்தபோது வாகனம் அந்த இடத்திலிருந்து மாயமாகியுள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போது, சிறுவன் ஒருவன் அந்த வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதே பகுதியில் சமீபத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்