ஏழு பேர் கொண்ட குழு அமைப்பு - பேரவையில் அமைச்சர் சொன்ன தகவல்
நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த போது, இந்த நிதியாண்டில் இதுவரை ஆயிரத்து 34 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 400 கோடி ரூபாய் மதிப்பில் தமிழகம் முழுவதும் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் 3 ஆயிரத்து 29 நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு, 34 லட்சத்து 96 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
Next Story