சச்சினின் தொண்டு நிறுவனத்திற்கு இயக்குநராக சாரா டெண்டுல்கர் நியமனம்

x

சச்சினின் தொண்டு நிறுவனத்திற்கு இயக்குநராக சாரா டெண்டுல்கர் நியமனம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா, சச்சின் டெண்டுல்கருக்கு சொந்தமான தொண்டு நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், தனது மகள் சாரா பொது சுகாதாரம் ஊட்டச்சத்து குறித்த படிப்பில், லண்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை மேம்படுத்தும் பணியை தொடங்கியுள்ள சாரா, கல்வி, விளையாட்டு, சுகாதாரம் தொடர்பான பணிகளில் ஈடுபடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்