வேலை இழப்பால் திண்டாடும் பேட்டை துள்ளல் மேளம் வாசிப்பவர்கள்

x

சபரிமலை ஐயப்பன் கோயிலில், எரிமேலியில் ஐயப்பன் தோழர் வாவர் பள்ளிவாசலில் இருந்து தர்ம சாஸ்தா கோயில் வரை பேட்டை துள்ளி பின்னர் சபரி மலை ஐயப்பனை காண வருவது வழக்கம். இந்தப் பேட்டை துள்ளலின் போது ஐயப்ப பக்தர்கள் உடல் முழுவதும் வண்ணப் பொடிகள் பூசி கையில் வாள், தண்டாயுதம், இலை தழைகள், போன்றவற்றுடன், மேளம் வாசிக்க ஐயப்ப பக்தர்கள் நடனமாடி பள்ளிவாசலில் இருந்து சாஸ்தா கோயில் வரை செல்வார்கள். பேட்டை துள்ளும் ஐயப்ப பக்தர்களுக்கு மேளம் வாசிப்பதற்காக, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், விழுப்புரம், மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எரிமேலிக்கு வந்துள்ளனர். இவர்களில் ஏராளமானோர் இந்த ந் மாதங்களில் கிடைக்கும் வருவாயை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு கிடைக்கும் குறைந்த வருவாயில் தேவசம் போர்டுக்கு ஒரு குழுவிற்கு 50 ரூபாய் என பணம் செலுத்தி வருவதோடு, உணவு, தங்குமிடத்திற்கு பணம் செலவாகி விடுகிறது. அத்துடன், ஐயப்ப பக்தர்கள் சிலர் தாங்களே ப்ளாஸ்டிக் மேளங்களை வாசித்தப்படி செல்வதால், பேட்டை துள்ளல் வாசிப்பவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்