"சமூக நீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும்" - மேடையில் ஆளுநர் பரபரப்பு பேச்சு | RN Ravi
ஓசூரில் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், 60 ஆண்டுகளாக இரவும் பகலும் சமூக நீதி குறித்து பேசி வந்தாலும், தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் இன்னும் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். சாதிய ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார். வள்ளலார் சனாதன தர்மத்தை மீட்டதாக கூறிய ஆளுநர், தமிழையும் சமஸ்கிருதத்தையும் அழிக்க நினைத்த ஆங்கிலேயரின் முயற்சியை வள்ளலார் தடுத்ததாகவும் கூறியுள்ளார்.
Next Story