இளம் தொழில் முனைவோர்களின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று, ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற, இளம் தொழில்முனைவோர்களுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று, தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய ஆளுநர் ரவி, உலக நாடுகள் இந்தியாவின் தலைமை துவத்தை உற்று நோக்கி வருகிறது என்றார்.
இளம் தலைமுறையினர் தங்களது திறன்களை மேம்படுத்தி கொள்ளும்பட்சத்தில், சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்வதால், மனஅழுத்தம் என்பதை முழுவதும் கட்டுப்படுத்தலாம் என்று கூறினார். தற்போது உள்ள கல்வி முறை மன அழுத்தம் தருவதாக உள்ளது என்றும், எனவே இந்த கல்வி கொள்கை மாற்ற வேண்டும் என்றார். அதற்காக தான் புதிய கல்வி கொள்கை வந்துள்ளது என்றும் ஆளுநர் கூறினார்.
முன்னதாக ஆளுநர் நிகழ்ச்சியில், முதலில் தேசிய கீதம் பாட வேண்டிய மாணவிகள் பதற்றத்தில் தடுமாறி தமிழ்த்தாய் வாழ்த்தை பாட தொடங்கினர். பின்னர் நிறுத்திவிட்டு தேசியகீதம் பாடி பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முறையாக பாடினர்.