ரேஷனில் துவரம் பருப்புக்கு பதில் வேறு பருப்பா? - பரபரப்பு வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு
ரேஷனில் துவரம் பருப்புக்கு பதில் வேறு பருப்பா? - பரபரப்பு வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு
ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் மசூர் பருப்பை விநியோகிக்க முடியும் என்ற நிலையில், எதன் அடிப்படையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது என விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், கூடுதல் ஊட்டச்சத்து நிறைந்த மசூர் பருப்பையும் கொள்முதல் செய்யக் கோரி, தனியார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மசூர் பருப்பை கொள்முதல் செய்வதன் மூலம் தமிழக அரசால் 150 கோடி ரூபாய் மிச்சமாகும் என வாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு , தமிழக மக்கள் மசூர் பருப்பை விட துவரம் பருப்பையே அதிகம் விரும்புவதாக விளக்கமளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எதன் அடிப்படையில் பொது வினியோக திட்டத்தில் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறித்து 2 வாரங்களில் விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.