இன்று முதல்... ரெடியா இருங்க மக்களே..

x

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இன்று (9/1/2025) முதல் 12ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிடப்பட்ட எண்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, ஆகியவை பொங்கல் பரிசாக விநியோகிக்கப்பட உள்ளது. பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி- சேலைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்