நடிகர் ரக்ஷித் ஷெட்டி மீது புகார்.. முன் ஜாமின் கோரி மனு

x

காப்புரிமை மீறல் விவகாரத்தில், பிரபல கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி, முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

'அவனே ஸ்ரீமன் நாராயணா', '777 சார்லி' ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழிலும் நடித்துள்ளவர், கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி.

சமீபத்தில் இவரது தயாரிப்பு நிறுவனம் தயாரித்து ஓ.டி.டி தளத்தில் வெளியான 'பேச்சிலர் பார்ட்டி' என்ற திரைப்படத்தில் 'நியாய எல்லி இதே', 'காலிமாத்து' ஆகிய படங்களில் இருந்து பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இதற்காக அதன் உரிமையை வைத்துள்ள எம்ஆர்டி மியூசிக் என்ற நிறுவனத்திடம் ரக்‌ஷித் ஷெட்டி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் சுமுக முடிவு ஏற்படாத நிலையில், அனுமதியின்றி அந்த பாடல்களை 'பேச்சிலர் பார்ட்டி' படத்தில் பயன்படுத்தியதாக,

ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டூடியோஸ் மீது, எம்ஆர்டி மியூசிக் நிறுவனத்தின் பங்குதாரர் நவீன் குமார், பெங்களூரு போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து விளக்கம் கேட்டு போலீசார் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், முன்ஜாமின் கோரி, பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றத்தில் ரக்‌ஷித்‌ ஷெட்டி மனுதாக்கல் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்