பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க கோரி.. - ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்
ராபிடோ, ஓலா, ஊபர் போன்ற பைக் டாக்ஸிகளின் செயலிகளை ஃபிளே ஸ்டோரிலிருந்து நீக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் புகாரளித்தனர். ராபிடோ போன்ற டாக்ஸி நிறுவனங்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், சென்னையில் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிப்படைந்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சட்டவிரோதமாக இயக்கப்படும் பைக் டாக்ஸி சேவைகளுக்கு நிரந்தரமாக தடைவிதிக்க வேண்டும் எனவும் அந்நிறுவனம் மற்றும் ஓட்டுநர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
Next Story