#JUSTIN || அன்றே எச்சரித்த ரஞ்சனா! இன்று நடந்த விபரீதம்! கண்ணிமைக்கும் நேரத்தில் துண்டான கால்கள்

x

குன்றத்தூர் அடுத்த கொல்லசேரி நான்கு சாலை சந்திப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது இந்த பள்ளியில் குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியிலிருந்து வீடுகளுக்கு செல்வதற்காக அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கம் இந்நிலையில் கொல்லச்சேரி நான்கு சாலையிலிருந்து குன்றத்தூர் நோக்கி வந்த அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் வந்தனர் அப்போது குன்றத்தூர் தேரடி அருகே வந்தபோது படிக்கட்டில் பயணம் செய்தபடி வந்த மாணவன் ஒருவன் தவறி கீழே விழுந்ததில் அவனது காலில் சக்கரம் ஏறி இறங்கியதில் இரண்டு கால்களும் தூண்டானது இதனை கண்டதும் படியில் தொடங்கி வந்த சக மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர் பொதுமக்கள் பள்ளி மாணவனின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த மாணவனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவனின் இரண்டு கால்களும் துண்டான சம்பவம் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்