ரூ. 5 கோடி... நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் நூதன மோசடி செய்த காசாளர்.. அதிரடி காட்டிய அதிகாரிகள்

x

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே, நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 கோடி ரூபாய் பணம் கையாடல் செய்த செயலாளர் மற்றும் கேஷியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

வாலஜாபாத் அடுத்த தென்கடப்பந்தங்கல் கிராமத்தில் நகர கூட்டுறவு கடன் சங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடன் சங்கத்தில் நிரந்தர வைப்பு நிதி மற்றும் சேமிப்பு கணக்குகளில் இருந்து போலி கையெழுத்து மூலம் சுமார் 5 கோடி ரூபாய் வரை கையாடல் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் மற்றும் அதிகாரிகள்... சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்தனர். தொடர்ந்து வாடிக்கையாளர்களின் வீடு வீடாக சென்று அவர்களின் நிரந்தர வைப்பு பத்திரங்களை சரிபார்த்த போது கோடிக்கணக்கிலான பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது அம்பலாமனது. இந்நிலையில், சங்கத்தின் செயலாளர் சங்கர் மற்றும் காசாளர் பாரதி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், கூட்டுறவு துறைக்கு தனியாக ஆடிட்டர்கள் இருந்தும் முறையாக தணிக்கை செய்யாததால், இது போன்ற முறைகேடுகள் அரங்கேறி ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளின் பணம் பறிபோவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்