நீதிமன்றம் போட்ட உத்தரவு.. என்ட்ரி கொடுத்த அதிகாரிகள்.. போராட்டத்தில் குதித்த மக்கள்..

x

காவேரிப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியை தடுத்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அவளூர் பஸ் நிறுத்தம் எதிரே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். கிராம மக்கள் ஆபத்தான முறையில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதாக அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற விசாரணையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகளை அப்பகுதியில் மேற்கொள்வதற்காக முயற்சி செய்தபோது கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 6 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தில், நெடுஞ்சாலைத்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்