மேல்மருவத்தூர் சென்று திரும்பும் போது உடல் நசுங்கி பலியான 4 பேர்.. ரோட்டில் சிதறிய... 35 பேர் நிலை?

x

மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று விட்டு கர்நாடகா மாநிலம் முல்பாகளுர் நோக்கி கர்நாடகா அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. ராணிப்பேட்டை சிப்காட் அருகே எம்ரால்டு பகுதியில் வந்த போது, முன்னால் சென்ற கனரக வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. அப்போது ஆந்திராவில் இருந்து காய்கறிகளை ஏற்றுக்கொண்டு கோயம்பேடு நோக்கி வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பின்னால் வந்த கனரக வாகனமும் கர்நாடகா அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுனர் பலமாக சிக்கிக் கொண்டதால், கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டார். சாலையில் காய்கறி மூட்டைகள் சிதறியதால், போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா ஆய்வு செய்தார். படுகாயமடைந்த 35க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்