நேருக்கு நேர் மோதிய லாரி - பேருந்து.. துடிதுடித்து பலியான 4 பேர்.. 35 பேர் நிலை?

x

ராணிபேட்டை மாவட்டம் வாலாஜா அருகே பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வாலாஜா எமரால்டு நகர் பகுதியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. சென்னை பெங்களூர் மாநில நெடுஞ்சாலையில் மேல்மருவத்துரில் இருந்து முல்பாகளுர் நோக்கி சென்ற கர்நாடக அரசு பேருந்தும் சென்னை நோக்கி காய்கறி லோடு ஏற்றி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதின. அதே நேரத்தில் பின்னால் வந்த லாரி பேருந்தின் மீது மோதியது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்