இளம்பெண் திடீர் மரணம் - பயத்தில் நடுநடுங்கி இருக்கும் ஊர் மக்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் தேவதானம் பகுதியை சேர்ந்த பிரியா, செவிலியர் படிப்பை முடித்துவிட்டு மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். டெங்கு பாதிப்பு காரணமாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் கடந்த வாரம் வாலாஜா கடப்பாரங்கன் தெருவை சேர்ந்த ஹரி என்ற சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story