ராமேஸ்வரம் தீவை சுற்றிவரும் சவால் - மோடி நின்ற இடத்தில் முடியும் பயணம்

x

ராமேஸ்வரம் தீவை சுற்றி வரும் சவாலான கயாகிங் பயணத்தை இந்திய கடலோர காவல் படையினர் மேற்கொண்டுள்ளனர்.கடலோர பாதுகாப்பு, நிலையான மீன்பிடி நடைமுறைகள் குறித்து கடலோர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்திய கடலோர காவல் படையினர் ராமேஸ்வரம் தீவை சுற்றிவரும் சவாலான கயாகிங் பயணத்தை தொடங்கியுள்ளனர். மூன்று நாட்களில் 80 கிலோமீட்டர் கடலில் பயணம் மேற்கொள்ளும் இந்த திட்டத்தை, இந்திய கடலோர காவல் படை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. நேற்று மூன்று வீரர்கள் தனித்தனி படகுகளில் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து ஓலைகுடா வரை சுமார் 27 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டனர். இன்று ஓலைகுடாவில் இருந்து குந்து கால் வரை செல்லும் அவர்கள் அங்கிருந்து நாளை அரிச்சல் முனை வரை பயணித்து சாகச பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்