ராமேஸ்வரம் ரயிலில் தூங்க முடியாததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு - பதறிப்போன ரயில்வே துறை

x

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான தண்டாயுதபாணி என்பவரிடம் விசாரணை நடத்திய போது, முன்பதிவில்லா டிக்கெட் வாங்கி கொண்டு தூங்குவதற்காக முன்பதிவு பெட்டிக்கு சென்றுள்ளார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், வெடிகுண்டு இருப்பதாக போலீசுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து மதுபோதையில் இருந்த அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்