ஆட்டோ ஓட்டுனருக்கு நேர்ந்த கொடூரம்... மணல் திருடர்கள் நிகழ்த்திய பயங்கரம் - நடுங்க வைக்கும் காட்சி

x

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மணல் கொள்ளையர்களை காட்டிக்கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டீக்கடையில் அமர்ந்திருந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரசேகர் மீது 10 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. தடுக்க முயன்ற அவரது உறவினரையும் அந்த கும்பல் அடித்து உதைத்துள்ளது. காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர், பரமக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியை வெளியிட்ட போலீசார், கருப்பு என்ற காமேஷ் உள்பட 5 மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்