இறந்த மனைவியை... ஊரே வாழ்த்த கணவன் செய்த உன்னத செயல்... கம்பீரமாக நிற்கும் `காதல்' தாஜ்மஹால்

x

இறந்த மனைவியின் நினைவாக ஒரு கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டி, வெண்கல சிலையை கணவர் நிறுவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கட்டுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கோட்டைமுத்து... இவருக்கும் விஜயா என்பவருக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது... இரு மகன்கள் உள்ளனர். கொரோனா காலகட்டத்தில் 2020ல் விஜயா உடல் நலக்குறைவில் உயிரிழந்தார்... மனைவி மேல் கொண்ட அதீத பாசத்தால் அவரது பிரிவை தாங்க முடியாமல் இருந்து வந்த கோட்டைமுத்து, விஜயா நினைவாக ஆதியூரில் உள்ள சொந்த நிலத்தில் அவரது அஸ்தியை கொண்டு வந்து நினைவிடம் கட்டியுள்ளார். அதில் ஒரு கோடி ரூபாய் செலவில் மணி மண்டபம் கட்டி, ஏழரை லட்சம் ரூபாய் செலவில் வெண்கல சிலையும் நிறுவி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். மணி மண்டபத்தில் உள்ளே இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மணிமண்டபமும், சிலையும் இன்று திறந்து வைக்கப்பட்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. அனைவருக்கும் இறந்த தனது மனைவியின் நினைவாக வேஷ்டி-சேலை மற்றும் தாம்பூலத்தட்டு வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்