இளம்பெண் பக்தர்கள் மட்டுமே டார்கெட்..உடைமாற்றும் அறையில் செய்த அசிங்கம்..அதிர்ச்சி சம்பவம்

x

ராமேஸ்வரத்தில் பெண் பக்தர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

அக்னிதீர்த்த கடற்கரையில் குளித்த பக்தர்கள், தங்கள் உடைகளை மாற்ற, தனியார் உடை மாற்றும் அறையில் வரிசையில் காத்திருந்தனர்.

அவர்களில் இளம்பெண்களை மட்டும் தனி வரிசையில் அனுப்பியதால் சந்தேகமடைந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், உடை மாற்றும் அறையை சோதனையிட்டபோது ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரில் ராஜேஷ் கண்ணன், மீரா மைதீன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்