வடக்கு நண்பருக்கு வாக்கப்பட நினைத்து... மனைவி போட்ட ஸ்கெட்ச்- கணவனை பார்த்ததும் கூட்டாளியான கொலையாளி
ராமநாதபுரம் மாவட்டம், தெற்கு கும்பரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மனைவி ஈஸ்வரி. இவர் வேலைக்கு சென்ற இடத்தில் ஒடிசாவை சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இது அவரது கணவர் லட்சுமணனுக்கு தெரிந்து பிரச்சினை நடந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவரை கொலை செய்ய முடிவு செய்த ஈஸ்வரி, கவுதம் என்பரிடம் 70 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்துள்ளார். ஆனால், லட்சுமணனின் நிலையை கண்டு பரிதாபப்பட்ட கவுதம், அவருக்கே ஃபோன் செய்து விவரத்தை கூறி உள்ளார். அதுமட்டுமின்றி, மனைவியின் கள்ளக்காதலனை கொல்ல பணம் கேட்டு பேரம் பேசியுள்ளார். அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மனைவி ஈஸ்வரி, கவுதம், இடைத்தரகராக செயல்பட்ட பிரதீபன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஈஸ்வரியின் கள்ளக்காதலனான சக்தி குமார் பிஜிவை தேடி வருகின்றனர். இதனிடையே, லட்சுமணனிடன், கவுதம் பேரம் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.