விபத்தில் உயிரிழந்த ஆசை மகன்.. கனத்த இதயத்துடன் பெற்றோர் எடுத்த முடிவு - நெகிழ்ச்சி சம்பவம்

x

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மேலக்கிடாரம் கிராமத்தை சேர்ந்த நாகேந்திரன் மகன் 22 வயது சஞ்சய் மென்பொருள் பொறியாளராக மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்... புதிய இருசக்கரம் வாங்குவதற்காக அப்பகுதியில் உள்ள ஷோரூமில் இருந்து இருசக்கர வாகனத்தை டெஸ்ட் டிரைவ் எடுத்துச் சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டது... மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சஞ்சய்க்கு மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில், மகனின் இதயம் கிட்னி உள்ளிட்ட அனைத்து உடல் உறுப்புகளையும் சஞ்சயின் பெற்றோர் தானம் செய்தனர்... சஞ்சய்யின் உடல் சொந்த ஊரான மேலக்கிடாரம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரது உடலுக்கு பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர் அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்