உச்சகட்ட அவலத்தின் காட்சி... வைகையை நோக்கி காத்திருக்கும் மக்கள்

x

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகும் நிலையில், அறுவடைக்கு வழியின்றி வயல்களில் கால்நடைகள் மேயும் அவலம் ஏற்பட்டுள்ளது...

மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வைகை ஆற்று தண்ணீரை நம்பியே நெல் சாகுபடி செய்யப்படுகிறது. பரமக்குடி அருகே பார்த்திபனூர், நெல்மடூர், வழிமறச்சான் பிடாரிச்சரி உள்ளிட்ட கிராமங்களில் பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து பிரிந்து செல்லும் பரலையாற்றை நம்பியே விவசாயிகள் உள்ளனர்... அவ்வப்போது பெய்த மழைக்கு கண்மாய் ஓரளவு நிரம்பியது... இதை பயன்படுத்தி நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி களை எடுத்து உரமிட்டனர்... ஆனால் பலன் தரும் நேரத்தில் மழை இல்லாததால், கண்மாய்க்கும் போதிய நீர்வரத்து இன்றி வறண்டு போனது. உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போனதால் நெற்பயிர்கள் கருகின. வயல்கள் முழுவதும் பாலம் பாலமாக பிளந்து காணப்படுகிறது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தது பயனற்று போனதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்... இந்த சூழலில் நெல்லை அறுவடை செய்ய முடியாத விரக்தியில் உள்ள விவசாயிகள் வயலில் ஆடு,மாடுகளை மேய விட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்