மழையால் துடிதுடித்து பறிபோன பிஞ்சு உயிர்.. பரமக்குடி அருகே அதிர்ச்சி
மேலாய்குடி கிராமம் யாதவர் தெருவில் வசித்து வரும் பால்ராஜ் - ஜெயலட்சுமி விவசாய தம்பதிக்கு 5 வயதில் கீர்த்திகா என்ற மகள் இருந்தார்... வீட்டில் தூங்கி எழுந்த கீர்த்திகா இயற்கை உபாதை கழிக்க வீட்டின் வெளியே வந்த போது மழையால் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் தலையில் பலத்ஹ்ட காயமடைந்த கீர்த்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்...
உறவினர் அனிதாவிற்கு லேசானம் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் எமனேஸ்வரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story