மொத்த காவல்துறை வட்டாரத்தையும் பரபரப்பை கிளப்பிய ஒற்றை கடிதம் - தீயாய் பரவுகிறது.. பின்னணி என்ன?

x

சட்டம் ஒழுங்கு பிரச்சினையால் தனது பணியை செய்ய இயலவில்லை எனப் பல அடுக்கடுகான குற்றச்சாட்டுகளை முன் வைத்து, உள்துறை செயலாளருக்கு இன்ஸ்பெக்டர் ஒருவர் கடிதம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை உட்கோட்ட ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர், சரவணன். இவர் தன்னிடம் கேட்காமலேயே, உட்கோட்ட முகாம் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆயுதப்படைப் பிரிவின் பல்வேறு பணிகளுக்கு தனது காவல் நிலையத்தில் இருந்து உயர் அதிகாரிகள், காவலர்களை அனுப்பி வருவதாகவும், இதனால் அங்கு பணி செய்ய இயலவில்லை எனவும் கூறி, உள்துறை செயலருக்கு அனுப்பிய கடிதம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில், தனது அதிகாரத்தை முழுமையாக காவல் நிலையத்தில் செயல்படுத்த முடியவில்லை எனவும், திருவாடானை உட்கோட்ட முகாம் அலுவலகத்தின் எழுத்தர் தலையிடுவதாக கூறி, இந்த காவல்நிலையத்தில் பணி செய்ய இயலவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில், திருவாடனை உட்கோட்ட முகாம் அலுவலகத்தில் இருந்து தொடர்ந்து தன்னிடம் கேட்காமல் ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தன்னிச்சையாக அலுவல் பணிகள், சட்ட ஒழுங்கு பிரச்சினைகளுக்கு காவலர்களை நியமித்து வருகின்றனர். அதோடு, காவல் நிலைய சரகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இடையூறாகவும், ஆயுதப் படையிலிருந்து தன்னிச்சையாக தனக்கே தெரியாமல், நேரடியாக காவலர்களுக்கு பல தகவல்கள் மற்றும் அலுவலக பணிகள் குறித்து தெரிவிக்கின்றனர் என்பன உள்ளிட்ட பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்து உள்ளார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்