திடீரென 4 அடி வளர்ந்த வீடு - ராம்நாட்டில் நெகிழ்ச்சி சம்பவம் | Ramanathapuram | Thanthi TV
ராமநாதபுரம் மாவட்டம், பரமகுடியில், அபுதாஹிர் என்பவரின் வீட்டின் முன்புறம் உள்ள சாலை 2 அடி உயர்ந்துள்ளதால், வீடு பள்ளத்தில் சென்று, மழை நீர் வீட்டில் நுழையும் சுழல் உள்ளது. அவரின் தந்தை அவருக்கு அன்பளிப்பாக வழங்கிய இந்த இந்த வீட்டை இடித்துவிட்டு புது வீடு கட்ட செய்யது அப்தாஹீர் குடும்பத்தினருக்கு மனமில்லை. எனவே சென்னையை சேர்ந்தகட்டுமான நிறுவனம் மூலம் வீட்டை சுற்றிலும் 100 ஜாக்கி வைத்து வீட்டை 3 அடி உயர்த்தியுள்ளனர். இன்னும் 1 அடி வரை உயர்த்த உள்ளனர். இந்த முறையில் வீட்டின் தரைத்தளம் மட்டும் சேதமடைகிறது. சுவர்களிலும், மேற்கூரை கான்கிரீட் தளத்திலும் சிறு விரிசல் கூட விழவில்லை.
Next Story