பைக்கால் வீட்டுக்குள் புகுந்த 10 பேர்.. அவமானத்தில் உயிரை மாய்த்த கணவன்.. கை, கால் நடுங்கிய மனைவி
தனியார் நிதி நிறுவனத்தில் தவணைத் தொகை கட்டமுடியாமல் கணவர், தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு பெற்று தரக் கோரி, மனைவி, ராமநாதபுரம் ஆட்சியரிடம், மனு அளித்தார்.
சாயல்குடி அருகே உள்ளது நரிப்பையூர் இந்த ஊரைச் சேர்ந்த அமானுல்லா என்பவர் மனைவி ரமிலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ராமநாதபுரம் ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் ஒன்றை அளித்தனர். அதில், தன்னுடைய கணவர் அமானுல்லா சாயல்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில், இரு சக்கர வாகன கடன் பெற்றதாகவும், பெற்ற கடனுக்கு பெரும் பகுதியை தவணை செலுத்தி விட்ட பிறகும் சில தவணைகள் மட்டும் பாக்கி இருந்ததாக கூறியுள்ளார்.
குடும்ப சூழ்நிலையால் அவரால் தவணை கட்ட முடியாத நிலை இருந்தபோது, தனியார் நிறுவனம் வாகனத்தை பறிமுதல் செய்து சென்றதாகவும் கூறியுள்ளார். அதோடு கூடுதல் வட்டி கேட்டு அடியாட்களை வைத்து மிரட்டியால் தனது கணவர் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறியுள்ளார். எனவே தனியார் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வாங்கி தர கோரிக்கை விடுத்துள்ளார்.