மேக வெடிப்பால் கொட்டித்தீர்த்த மழை...800 பேருக்கு நேர்ந்த கதி...தவிக்கும் ராமநாதபுரம் மக்கள்
மேக வெடிப்பால் கொட்டித்தீர்த்த மழை...800 பேருக்கு நேர்ந்த கதி...தவிக்கும் ராமநாதபுரம் மக்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்த நிலையில், பல இடங்களில் தண்ணீர் தேங்கி, கழிவுநீருடன் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள பிற அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வைரஸ் மற்றும் காய்ச்சலால் 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story