"இந்தியாவிலேயே 2 பேர் தான்.." - பட்டதாரி இளைஞரின் பார்புகழும் திறமை.. வீடுமுழுக்க நிரம்பி இருக்கும் பொக்கிஷம்.. ஆனால் கடவுள் வைத்த ஒரு குறை

x

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஓவியத்தில் அசத்தி வருகிறார் இளைஞர் ஒருவர். பேரையூர் மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி ராஜா. ஓவியத்தில் அதீத ஆர்வம் கொண்ட இவரது பெற்றோர் கூலி வேலை செய்து தங்கள் மகனின் கனவை நிறைவேற்ற போராடி வருகின்றனர். திருவள்ளுவரை வரைந்து ஆயிரத்து 330 குறள்களையும் அதில் எழுதி சாதனை படைத்துள்ளார் ராஜா. பென்சிலைக் கொண்டு மர இலைகளில் உருவம் உருவாக்குதல் போன்ற புது முயற்சிகளையும் செய்து வருகிறார்... ராமநாதபுரம் ஆட்சியர் ராஜாவின் திறமையைக் கண்டு பிரம்மித்து பாராட்டி இருக்கிறார். பேச்சு தடுமாற்றத்தால் தொடர்ச்சியாக பேச முடியாவிட்டாலும் தன் ஓவியத் திறமையால் அனைவரையும் தன்னைப் பற்றி பேச வைத்துள்ளார் ராஜா...


Next Story

மேலும் செய்திகள்