ரஜினியை ஆடிப்போக வைத்த `போஸ்டர்’ - கோபத்தில் ரசிகர்களுக்கு போட்ட கட்டளை

x

பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக போஸ்டர் அடித்து அடுத்தவர்களின் மனதை புண்படுத்தக் கூடாது என மதுரை ரஜினி ரசிகர்களுக்கு, மாநில ரஜினி மன்ற நிர்வாகி மூலம் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார். ரஜினிகாந்த்தின் படத்துடன் ஜெயலலிதா, எம்ஜிஆர், அறிஞர் அண்ணா, காமராஜர் காந்தி ஆகிய தலைவர்களின் படங்களையும் சேர்த்து வைத்து, இரண்டாவது போயஸ் கார்டனின் புயலே என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டர்கள் அடித்து மதுரையின் முக்கிய பகுதிகளில் ஒட்டி இருந்தனர். அந்த அறிவுறுத்தலை தொடர்ந்து மதுரை ரஜினி ரசிகர்கள் புதிய போஸ்டரை உருவாக்கி, பழைய போஸ்டரை மறைத்து ஒட்டி வருகின்றனர்,


Next Story

மேலும் செய்திகள்