ஹாஸ்பிடலில் தந்தை... நேரே தந்தையிடம் ஆசி பெற்ற மணமகன் - வாழ்த்திய மருத்துவர்கள் - நெகிழ்ச்சி வீடியோ

x

சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் தந்தையை, திருமணம் முடிந்த கையோடு, மகன்,மணக்கோலத்தில் நேரில் வந்து வாழ்த்து பெற்றார். தசை நார் நோய் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிக்கு, அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பல லட்சம் மதிப்பில், அரசு காப்பீட்டு திட்ட உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், அவரது மகனுக்கு இன்று திருமணம் நடைபெற்ற நிலையில்,மணக்கோலத்தில் வந்து தந்தையிடம் வாழ்த்து பெற்றார்.மணமக்களுக்கு,அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் உட்பட மருத்துவக் குழுவினர், வாழ்த்து தெரிவித்ததுடன், பரிசுகளை வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்