அடித்து ஊத்திய பேய் மழை... சாலைகளை மொத்தமாக சூழ்ந்த தண்ணீர் - பரபரப்பு காட்சிகள்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.திருவண்ணாமலை மாவட்டத்தில் வேங்கிக்கால், சோமாசிப்பாடி, மல்லவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்தை இடியுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக கூடிய கனமழை பெய்தது. இதே போன்று போளூர், வசூர், குன்னத்தூர், ரெண்டேரிப்பட்டு, மாம்பட்டு உள்ளிட்ட பகுதிளிலும் கனமழை கொட்டித் தீர்தத்து.வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் நகரம், நெல்லூர் பேட்டை, கொண்ட சமுத்திரம், கல்லூர், மேல் ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. தருமபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, உள்ளிட்ட அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. மதுரை மாவட்டத்தில், மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி அழகர்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.