தேரை இழுக்கும் முன்னே அதிசயம்..கொங்கு மாவட்டங்களில் மாமழை - அசந்து பார்க்கும் மக்கள்

x

தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கோடை மழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்ஈரோடு மாவட்டம் அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மேலாக பலத்த இடியுடன் கூடிய மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.சேலம் மாவட்டம் சங்ககிரி அதன் சுற்று வட்டார பகுதிகளான வைகுந்தம், மகுடஞ்சாவடி, இடங்கணசாலை உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ள நுழையில் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருச்சி மாவட்டம் முசிறி அதன் சுற்றுவட்டார பகுதிகளான, தொட்டியம், தா.பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. கோடை விவசாயத்திற்கு தேவையான நிலத்தடி நீர் கிடைத்துள்ள நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்