#BREAKING || கனமழை - எங்கெங்கு பள்ளிகளுக்கு விடுமுறை? | School Leave
அதன்படி, கடலூர் மாவட்டத்தில், இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவித்து, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கனமழை எச்சரிக்கை எதிரொலியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கான திருத்தப்பட்ட தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.