மூழ்கிய தரைப்பாலம்... ஆபத்தை உணராமல் மக்கள் செய்யும் விபரீதம் - அதிர்ச்சி காட்சிகள்

x

கனமழை காரணமாக தென் பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே இருக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.. இது கடலூர் மற்றும் புதுவையை இணைக்கும் ஒரு பாலமாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் பயணம் செய்து வருகின்றனர். மேலும் புதுவைக்கு சென்று மது அருந்துபவர்களும் இந்த பாலத்தின் வழியாக ஆபத்தை உணராமல் குடை பிடித்தபடி செல்வதையும் காண முடிகிறது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்த பாலத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் தற்காலிகமாக போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்