இடி, மின்னலுடன் மீண்டும் தாண்டவம்..தமிழகத்தில் சம்பவம் செய்யும் இயற்கை...குமரியில் மிதக்கும் வீடுகள்

x

இடி, மின்னலுடன் மீண்டும் தாண்டவம்

தமிழகத்தில் சம்பவம் செய்யும் இயற்கை

வெள்ளக்காடு...குமரியில் மிதக்கும் வீடுகள்

குமரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது... பல்வேறு இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்ட நிலையில் அது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

கடந்த வாரம் முழுக்க மழை பெய்து ஓய்ந்த நிலையில், குமரி மாவட்ட மக்கள் சற்றே ஆசுவாசமடைந்தனர். இந்த நிலையில் கனமழையும், இடியும்,மின்னலுமாக குமரியில் மீண்டும் கொட்டி தீர்த்துள்ளது கனமழை

பழமையான பகவதி அம்மன் கோயிலில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.வழிபாட்டிற்கு வந்திருந்த பக்தர்கள், செய்வதறியாது திகைத்தபடி, வெள்ளத்தை வேடிக்கை பார்த்தபடி நிற்கும் சூழல் ஏற்பட்டது.

புதுகிராமம் பகுதியில், மழை வெள்ளம் பெருக்கெடுத்து, வீடுகளுக்குள் புகுந்தது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீரை,அப்புறப்படுத்த தொடங்கினார்கள்.

தோவாளை பகுதியில் வீடுகள், கோயில், தென்னந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. பெருக்கெடுத்த வெள்ளத்தின் காரணமாக அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்

இதே போன்று,கடுக்கரை, சாமி தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும், கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வடகிழக்கு பருவமழை தனது தீவிரத்தை காட்ட துவங்கியுள்ள நிலையில், வெள்ள நீர் காரணமாக அம்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. வானிலை ஆய்வு மையமோ, கனமழை நீளும் என்று எச்சரிக்கை விடுத்து, பீதியை கூட்டியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்