விடிய விடிய பெய்த பேய் மழை...தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம் - அதிர்ச்சி காட்சிகள்

x

திருவாரூரில் கனமழை வெளுத்து வாங்கியது...திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாமினி கொக்காலாடி, ஆதிரெங்கம், கட்டிமேடு, வேலூர், மணலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சேந்தமங்கலம், வண்டாம் பாலை, தண்டலை, புலிவலம், வாழவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் நன்னிலம் ஆண்டிபந்தல், சன்னாநல்லூர், நீடாமங்கம், குடவாசல், வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழையும் அவ்வப்போது விட்டுவிட்டு கனமழையும் பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 33 சென்டிமீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்