ஒரு ஏரியாவையும் விடாமல் சூறையாடிய மழை..தக்க சமயத்தில் ஹீரோவாக சென்ற பாலா..ஹீரோவாக பார்த்த ஊர்மக்கள்

x

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கொக்கு பாளையம் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கி நடிகர் பாலா உதவி செய்துள்ளார். கிராம மக்கள் இன்ஸ்டாகிராமில் அனுப்பிய வீடியோவை பார்த்த நடிகர் பாலா தனது நண்பர்களுடன் கொக்கு பாளையம் கிராமத்திற்கு வந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு தலா 5000 ரூபாய் , பால் , பிஸ்கட் பாக்கெட் உள்ளிட்டவை அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கினார். அவருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்